பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சபலென்கா

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் ப்பிரிவு 2வது சுற்றில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தகுதி பெற்றார். ரோலண்ட் கேரோஸில் நேற்று தொடங்கிய இத்தொடரின் முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்டியுக்குடன் (20 வயது, 39வது ரேங்க்) மோதிய சபலென்கா (25 வயது, 2வது ரேங்க்) அதிரடியா விளையாடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அர்ஜென்டினாவின் பொடரோஸ்கா, ஸ்டோர்ம் ஹன்டர் (ஆஸி.), இரினா ஷைமனோவிச் (பெலாரஸ்), மெக்தலீனா பிரெக் (போலந்து) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 6-3, 5-7, 6-4, 2-6, 6-4 என 5 செட்கள் கடுமையாகப் போராடி டேவிட் காஃபினை (பெல்ஜியம்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீரர்கள் கரென் கச்சனோவ் (ரஷ்யா), தனாசி கோக்கினாகிஸ் (ஆஸி.) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சபலென்கா appeared first on Dinakaran.

Related Stories: