தங்கம் வென்றார் பிரணாய்

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்குடன் நேற்று மோதிய பிரணாய் 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஹாங் யாங் 21-13 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் சளைக்காமல் புள்ளிகளை குவித்து முன்னேற, வெற்றி யாருக்கு என்பதில் கடும் இழுபறி நிலவியது. 94 நிமிடங்களுக்கு நீடித்த பரபரப்பான இப்போட்டியில் பிரணாய் 21-19, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் போராடி வென்று மலேசியா மாஸ்டர்ஸ் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். 2017 யுஎஸ் கிராண்ட் பிரீ தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருந்த பிரணாய், அதன் பிறகு வெல்லும் தனிநபர் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தங்கம் வென்றார் பிரணாய் appeared first on Dinakaran.

Related Stories: