மலைக்கவைக்கும் புள்ளிவிவரம்: 16வது சீசன் ரன்குவிப்பு விக்கெட் வேட்டையில்

ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசனில் மலைக்கவைக்கும் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. அது பற்றிய புள்ளிவிவர தொகுப்பு:

* ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 36 இன்னிங்சில் 200+ ஸ்கோர் அடிக்கப்பட்டது. இதில் 8 இன்னிங்சில் 200+ இமாலய இலக்கை துரத்திய அணிகள் வெற்றியை வசப்படுத்தி அசத்தின. அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை 200+ ஸ்கோரை வெற்றிகரமாக சேஸ் செய்து புதிய சாதனை படைத்தது. கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத் அணிகள் தலா 1 முறை இப்படி சேஸ் செய்து வென்றன.

* 16 போட்டிகளில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 400 ரன்னுக்கு அதிகமாக அடிக்கப்பட்டது. இதுவும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக அமைந்தது. 12 போட்டிகளில் 2 அணிகளுமே 200+ ஸ்கோர் அடித்தன. 2022ல் அதிகபட்சமாக 5 போட்டிகளில் அடிக்கப்பட்ட சாதனை தகர்க்கப்பட்டது.

* நடப்பு தொடருக்கு முன்பாக, ஒரே இன்னிங்சில் 2 வீரர்கள் சதம் அடித்த சாதனை 2 முறை மட்டுமே நிகழ்த்தப்பட்டு இருந்தது. 2016, மே 14ம் தேதி குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூருவில் நடந்த போட்டியில் ஆர்சிபி வீரர்கள் கோஹ்லி (109), டி வில்லியர்ஸ் (129*) சதம் விளாசினர். 2019, மார்ச் 31ல் ஐதராபாத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் வீரர்கள் பேர்ஸ்டோ (114), வார்னர் (100*) சதம் அடித்தனர். இந்த சீசனில், முதல் முறையாக இரு அணி தரப்பிலும் தலா ஒரு சதம் பதிவான சாதனை நிகழ்த்தப்பட்டது.

* மே 18ல் ஐதராபாத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் சார்பில் ஹெய்ன்ரிச் கிளாஸன் (104), ஆர்சிபி தரப்பில் விராத் கோஹ்லி (100) சதம் அடித்தனர். அடுத்து மே 21ல் பெங்களூருவில் நடந்த போட்டியில் ஆர்சிபி சார்பில் கோஹ்லி (101*), குஜராத் சார்பில் ஷுப்மன் கில் (104) சதம் அடித்தனர்.

The post மலைக்கவைக்கும் புள்ளிவிவரம்: 16வது சீசன் ரன்குவிப்பு விக்கெட் வேட்டையில் appeared first on Dinakaran.

Related Stories: