சில்லி பாயின்ட்..

* ஆஸ்திரேலிய அணியுடன் லண்டனில் நடக்க உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 7-11) இருந்து தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தனது திருமண நிகழ்ச்சி காரணமாக விலகிய நிலையில், மாற்று வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (மும்பை) சேர்க்கப்பட்டுள்ளார்.

* குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான பைனலுடன் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பத்தி ராயுடு (38 வயது) நேற்று அறிவித்தார். ‘மும்பை, சென்னை என 2 மகத்தான அணிகளுக்காக 204 போட்டி, 14 சீசன், 11 பிளே ஆப் சுற்று, 8 பைனல், 5 கோப்பைகள். இது பைனலின் முடிவில் 6 கோப்பையாக மாறும் என நம்புகிறேன். மறக்க முடியாத பயணம் இது. இந்த போட்டியுடன் ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவில் ‘யு டர்ன்’ இருக்காது’ என்று ட்வீட் செய்துள்ளார்.

* சவுதி அரேபியாவின் அல் நசர் கால்பந்து அணிக்காக மிகப் பெரிய தொகைக்கு ஒப்பந்தமான போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு சீசனில் அந்த அணிக்காக கோப்பையை வென்று அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார். சவுதியின் மற்றொரு முன்னணி கால்பந்து கிளப் அணியான அல் இத்திகாட் ஒரு லீக் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையிலேயே சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்து, அல் நசர் கிளப் அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

* குதிரையேற்ற பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த பிஎஸ்ஜி கால்பந்து அணி கோல் கீப்பர் செர்ஜியோ ரிகோ (29 வயது, ஸ்பெயின்) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* ரேசிங் ஸ்டிராஸ்போர்க் அணியுடனான லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அடித்த கோலால் 1-1 என்ற கணக்கில் டிரா செய்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி 11வது முறையாக லீக்-1 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைப்பதை உறுதி செய்துள்ளது.

 

The post சில்லி பாயின்ட்.. appeared first on Dinakaran.

Related Stories: