இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவேத் தொடங்கும். ஜூன் மாதத்தில் இயல்பு அளவை விடவும் குறைவான மழையே இருக்கும். இந்த மழைக்காலத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய 55 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. ‘எல் நினோ’ காரணமாக, வரும் பருவமழைக் காலத்தில் குறைவான மழை கிடைக்கும் அபாயமும் உள்ளது.
பல வழிகளில் ஆராய்ந்து பார்த்ததில், வரும் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவில் இருக்கும். ஜூன் மாதத்தில் பெய்யும் குறைவான மழை காரணமாக, காரீப் பயிர் சாகுபடி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படலாம். இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒருசில பகுதிகளைத் தவிர்த்து ஜூன் மாதத்தில் குறைவான மழை பெய்யவே வாய்ப்புள்ளது. சில இடங்களில் மட்டுமே இயல்பான அளவைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்; தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.