சி ல் லி பா யி ன் ட்…

* மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் தகுதி பெற்றார். அரையிறுதியில் அவருடன் மோதிய இந்தோனேசியா வீரர் கிறிஸ்டியன் ஆதிநாதா முதல் செட்டில் 17-19 என பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து 14-21, 17-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவிடம் தோற்றார்.

* புரோ லீக் ஹாக்கி தொடரில் நேற்று பிரிட்டனுடன் மோதிய இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

* பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் சிறந்த வீரராக மான்செஸ்டர் சிட்டி அணியின் எட்லிங் ஹாலண்ட் தேர்வு செய்யப்பட்டார். அவர் 35 போட்டியில் 36 கோல் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

 

The post சி ல் லி பா யி ன் ட்… appeared first on Dinakaran.

Related Stories: