கணிப்பது கடினம்… சானியா கருத்து

மும்பை : பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி பாரிசில் இன்று தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெியன்), நோவக் ஜோகோவிச் (செர்பியா) உள்பட 128 வீரர்களும், மகளிர் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ரைபாகினா (கஜகிஸ்தான்) உள்பட 128 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

இது தவிர ஆண்கள், மகளிர், கலப்பு இரட்டையர் போட்டிகள், சிறுவர், சிறுமியர், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் சானியா மிர்சா, சோம்தேவ் ஆகியோர் நேற்று காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தினகரன் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சானியா, ‘மகளிர் இரட்டையர் பிரிவில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வது எளிதல்ல. நிறைய திறைமையான இளம், அனுபவ வீராங்கனைகள் களம் காண உள்ளனர். அதிலும் போட்டி அட்டவணை இன்னும் முடிவாகவில்லை. யார், யாருடன் சேர்ந்தும், எதிர்த்தும் விளையாடப் போகிறார்கள் என்று தெரியாததால் சாம்பியனை கணிப்பது கடினம். அதே நேரத்தில் ஜெசிகா (அமெரிக்கா), கிரெஜ்சிகோவா (செக் குடியரசு) போன்றோருடன் இணைந்து விளையாடும் ஜோடிகள் முதல் 4 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்’ என்றார்.

பெரிய ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு குறித்து சோம்தேவ் கூறுகையில் ‘காயம் காரணமாக ரபேல் நடால் விலகியுள்ளது வீரர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றம்தான். 2005ல் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வந்த நிலையில், முதல் முறையாக அவர் தனது அபிமான களிமண் தரை தொடரில் களமிறங்காமல் வேடிக்கை பார்க்க இருக்கிறார். என்னதான் ஜோகோவிச், அல்கராஸ் உள்பட பல முன்னணி வீரர்கள் இருந்தாலும், இங்கு 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால் விளையாடதது ஏமாற்றம் மட்டுமல்ல, வருத்தமான விஷயம்’ என்றார்.

 

The post கணிப்பது கடினம்… சானியா கருத்து appeared first on Dinakaran.

Related Stories: