சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் சிறிய நாடுகள் காணாமல் போய்விடும்: சி20 சர்வதேச மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் சிறிய நாடுகள் காணாமல் போய்விடும் என சி20 சர்வதேச மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையொட்டி உள்ள போர் பாயிண்ட் – ஷெரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் ‘உலகம் ஒரே குடும்பம்’ என வாசுதெய்வ குடும்பம் சின்மயா மிஷன் நடத்தும் 3 நாள் சி20 சர்வதேச மாநாடு நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், வாசுதேவ் குடும்பம் நமது இந்தியாவின் ஆன்மிக அடையாளம். மனித விதியில் ஜி20 எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரம், அரசியல் மற்றும் உலகை வடிவமைக்க அவர்களுக்கு தேவையாக உள்ளது.

இது, அனைவருக்கும் பாதுகாப்பானது மற்றும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நவீன அரசின் தோற்றம் சமூகம் என்பதை சிவில் சமூகம் அறிந்திருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் உலக வரைபடத்தில் இருந்து சிறிய நாடுகள் காணாமல் போய்விடும். சி20 வாசுதேவ குடும்பம் பற்றி பேசுகிறோம். இந்த சி20 ஆனது ஜி20க்கு கொள்கையை உருவாக்குவதற்கும், பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கும், கொள்கை ஆவணத்தை வரைவதில் சிறப்பு பொறுப்புடன் உள்ளது. இந்த, மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து ரிஷிகள் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு, ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.

The post சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் சிறிய நாடுகள் காணாமல் போய்விடும்: சி20 சர்வதேச மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: