இந்தியாவில் இருந்து டீ, காபி, பெட்ரோலிய பொருள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி: தென்னிந்திய துணை தூதர் தகவல்

கோவை: இந்தியாவில் இருந்து டீ, காபி, பெட்ரோலிய பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தென்னிந்தியாவின் துணை தூதர் ஓலக் அவுதீயூ தெரிவித்துள்ளார்.
கோவை இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் இந்தியா- ரஷ்யா தொழில் மேம்பாடு குறித்தும், கோவை தொழில் துறையினரின் உற்பத்தி பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் கலந்துரையாடல் நடந்தது.இதில், தென்னிந்தியாவின் ரஷ்ய துணை தூதர் ஓலக் அவுதீயூ பேசியதாவது: இந்தியா-ரஷ்யா தொழில் கூட்டமைப்பு ஒப்பந்தப்படி ரஷ்யாவில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதேபோல், இந்தியாவில் இருந்து டீ, காபி, பெட்ரோலிய பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களுக்கான பண பரிமாற்றத்தில் உள்ள சிக்கல்களை களைய பேச்சுவார்த்தை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை அருகே கடல்வழி பயணத்திற்கு புதிதாக ஒரு முனையத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த துறைமுகம் செயல்பாட்டிற்கு வந்தால், செலவினங்கள் குறைந்து ஏற்றுமதி, இறக்குமதி வேகமாக நடைபெறும். கோவை தொழிலதிபர்களின் உற்பத்தி பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எந்தெந்த வகையில் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார். ரஷ்யா- இந்தியா தொழில் வர்த்தக சபை பொதுசெயலர் தங்கப்பன், இந்திய தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

The post இந்தியாவில் இருந்து டீ, காபி, பெட்ரோலிய பொருள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி: தென்னிந்திய துணை தூதர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: