நேபாள பிரதமர் புஷ்பா கமல் 31ம் தேதி இந்தியா வருகை

புதுடெல்லி: நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரசந்தா அடுத்த வாரம் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பிரசந்தா பொறுப்பேற்றார். நேபாள பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரசந்தா இந்தியா வருகிறார். அவரது மகள் கங்கா தஹாலும் உடன் வருகிறார்.
ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நேபாள பிரதமர் பிரசந்தா மே 31ம் தேதி முதல் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார்.

அவருடன் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வருகின்றது. இந்த பயணத்தின்போது நேபாள பிரதமர் மரியாதை நிமித்தமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கார் ஆகியோரை சந்திக்கிறார். மேலும் பிரதமர் மோடியுடன் அவர் இந்தியா-நேபாள உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நேபாள பிரதமர் புஷ்பா கமல் 31ம் தேதி இந்தியா வருகை appeared first on Dinakaran.

Related Stories: