ஐபிஎல்லில் எனது சிறந்த இன்னிங்ஸ் இது தான்: ஆட்டநாயகன் சுப்மன் கில் உற்சாகம்

ஆட்டநாயகன் கில் கூறுகையில், என்னுடைய வெற்றிக்கு காரணம் சூழலுக்கு தகுந்த மாதிரி ஒவ்வொரு பந்தையும் நான் எதிர்கொள்கிறேன். ஒரே ஓவரில் மூன்று சிக்சர் அடித்த பிறகு இது என்னுடைய நாள் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. இதனால் அதிக ரன் தரக்கூடிய ஷாட்டுகளை ஆடினேன். கிரிக்கெட் வீரராக நாம் கற்றுக்கொண்டு இருக்க வேண்டும். நம்பிக்கை முக்கியமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல சர்வதேச கிரிக்கெட் சீசனுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வெற்றி என்பது சாதாரணமாக கிடைக்கவில்லை. இதற்கு பல விஷயங்கள் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய போது தான் எனக்குள் இந்த மாற்றம் ஏற்பட்டது.

2021ம் ஆண்டு எனக்கு காயம் ஏற்பட்டவுடன் அந்த நேரத்தில் என்னுடைய பேட்டிங்கில் நான் பல மாற்றங்களை செய்தேன். என்னுடைய யுக்திகளை மாற்றினேன். என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக்கொண்டேன். ஐபிஎல் தொடரில் நான் ஆடியதில் இதுதான் சிறந்த இன்னிங்சாக நான் கருதுகிறேன். நான் ஆரஞ்சு தொப்பியை வென்றுவிட்டேன் என்று எனக்கு தெரியாது. நான் பாத்ரூம் சென்றுவிட்டேன். விளையாடும்போது நிறைய வியர்வை கண்ணுக்குள் சென்றுவிட்டது . பவுண்டரி எல்லை பெரிதாக இருந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றால் டபுள்ஸ் ஓடி ரன் சேர்க்க வேண்டும். எந்த எல்லை சிறியதாக இருக்கிறது என்பதை கவனித்து விளையாட வேண்டும். இதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது என்று சுப்மன் கில் கூறினார்.

The post ஐபிஎல்லில் எனது சிறந்த இன்னிங்ஸ் இது தான்: ஆட்டநாயகன் சுப்மன் கில் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: