டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் கில் `பார்ம்’ தொடர வேண்டும்: ரோகித் சர்மா பேட்டி

தோல்வி குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மிகப்பெரிய ஸ்கோர் அடித்துவிட்டார்கள். கில் அபாரமாக விளையாடினார். பிட்ச் பேட் செய்வதற்கு நன்றாக இருந்தது. 25 ரன் கூடுதலாக கொடுத்துவிட்டோம். இருப்பினும் சேஸ் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையோடு களமிறங்கினோம். ஆனால் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். கிரீன்- சூர்யா சிறப்பாக ஆடினர். ஆனால் மற்றவர்கள் பாதையை தவறவிட்டதால் பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய முடியவில்லை. பவர்-பிளேவில் 2 விக்கெட் இழந்தது, கிரீன் கையில் அடிபட்டது என எதுவும் சாதகமாக அமையவில்லை.

எங்கள் அணியில் கில் போன்று ஒருவர் நின்று ஆடியிருந்தால் சேஸ் செய்திருக்கலாம். தொடர் முழுவதும் எங்கள் பேட்டிங் நன்றாக இருந்தது. பவுலிங்கில்தான் சில தவறுகள் நேர்ந்துவிட்டது. இந்த சீசனில் இளம் வீரர்கள் நன்றாக செயல்பட்டனர். அவர்களுக்கு பாராட்டுக்கள். கில் இன்று ஆடிய ஆட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். சிறந்த பார்மில் இருக்கிறார். இதனை (டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில்) தொடரவேண்டும்” என்றார்.

The post டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் கில் `பார்ம்’ தொடர வேண்டும்: ரோகித் சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: