விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 16.91 லட்சம் அரசு நலத்திட்ட உதவி: கரூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

கரூர், மே. 27: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் 28ம்தேதி அன்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: வடசேரி பள்ளி வளாகத்தின் நடுவில் தாழ்வாக செல்லும் மின்சார வழித்தடத்தினை மாற்றி அமைப்பது, ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் மரக்கன்றுகள் நடுவது, இதே பகுதியில் உள்ள கிராமத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை பராமரித்து தருவது, விவசாயத்துக்கு தேவையான வண்டல் மண் எடுப்பதற்கு ஆவண செய்து தருவது.

கூனம்பட்டி கிராம பகுதியில் அனைத்து வீட்டிற்கும் முறையான குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, காரைத்தோட்டம் பகுதியில் விவசாய நிலத்திற்கு செல்லும் சாலையை தார்சாலையாக மாற்றுவது, கார்வழி கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைத்து தருவது, இதே பகுதியில் சாலை ஒரப்பகுதியில் உள்ள குப்பைகள், கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது, வீரராக்கியம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் குத்தகைதாரர் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வது, மேட்டு மருதூர் விவசாய பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி தருவது, புகளூர் வாய்க்கால் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தூர்வாரி தருவது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கிருஷ்ணராயபுரம் வழியாக ரங்கநாதபுரம் செல்வதற்கு இணைப்பு பாலம் அமைத்து தருவது, அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பயன்பெறும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து தருவது, வளையல்காரன்புதூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி தருவது, கீழவெளியூர் கிராமத்தில் இடுகாட்டுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்றுவது, பணிக்கம்பட்டி கிராமத்தில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கிளை நு£லகங்கள் அமைப்பது, இதே பகுதியில் பழமையான பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தினை அகற்றி விட்டு புதிய பாலம் அமைத்து தருவது, உள் வீரராக்கியம் பகுதி ஏரியில் விவசாய நிலத்திற்கு தேவையான வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் பதில் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஈசநத்தம் பேரூந்து செல்லும் வழித்தடத்தில் நிழற்குடை அமைத்து தருவது, கருங்காலப்பள்ளி பகுதியில் நீர்நிலை தேக்க ª£ட்டியில் இருந்து தினசரி சீரான குடிநீர் வழங்குவது, இதே பகுதியில் மயான கொட்டகையை பராமரித்து தருவது. வண்டிபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை, தேவர்மலை பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து விவசாயிகளிடம் விவாதிக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் அளிக்கப்படுகின்ற கோரிக்கை மனுக்களககு உரிய காலத்தில் அவர்களின் கோரிக்கை தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த விவசாயிகள் குறைதீர் நர்ள கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். அந்த வகையில், 84 மனுக்கள் வரபெற்றன. தொடர்ந்து, வேளாண் உழவர் நலத்துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ. 2ஆயிரம் மதிப்பில் விசைத்தெளிப்பானும், 1 பயனாளிக்கு ரூ. 647 மதிப்பில் தார்பாலினும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில், கலைஞரின் அனைத்து கி ராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ. 3680 மதிப்பில் கொய்யா பரப்பு விரிவாக்கமும், 1 பயனாளிக்கு ரூ. 4800 மதிப்பில் நெல்லி பரப்பு விரிவாக்கமும், கலைஞரின் னைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ. 16லட்சத்து 80ஆயிரம் மதிப்பில் கறவை மாடு வங்கி கடனுதவியும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ. 16,91,127 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்.

மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மூன்று அடுக்கு அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு திட்டத்தில் மானியத்துடன் கறவை மாடு வங்கி கடனுதவி பெறுவது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன், கவிதா (நிலமெடுப்பு), வேளாண் இணை இயக்குநர் சிவசுப்ரமணியன், கோட்டாட்சியர்கள் ரூபினா, புஷ்பாதேவி, நேர்முக உதவியாளர் உமா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 16.91 லட்சம் அரசு நலத்திட்ட உதவி: கரூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: