டாஸ்மாக் கடை அருகே பிக்பாக்கெட் அடிக்க முயன்ற வாலிபர் கைது

கரூர், மே 27: கரூர் அருகே டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த எலக்ட்ரீசியனிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கரூர் பசுபதிபாளையம் அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(25). இவர், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 25ம்தேதி மதியம், கரூர் கொளந்தா கவுண்டனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் தன்னிடம் கத்தியை காட்டி பணம் ரூ. 200ஐ பறித்துச் சென்றதாக புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், பசுபதிபாளையம் போலீசார், இதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், வேல்முருகன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து, சந்தோஷை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், தப்பியோடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

The post டாஸ்மாக் கடை அருகே பிக்பாக்கெட் அடிக்க முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: