நாளை தொடங்கும் பிரெஞ்ச் ஓபன்: முன்னாள் சாம்பியன்கள் குறைவு

பாரிஸ்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா நாளை பாரிசில் தொடங்குகிறது. காயம், ஓய்வு காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கும் முன்னாள் சாம்பியன்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. மகளிர் பிரிவில் 2015ம் ஆண்டு வரை சாம்பியன் பெற்ற வீராங்கனைகள் எல்லோரும் ஓய்வு பெற்று விட்டனர். கூடவே 2019ம் ஆண்டு சாம்பியன் பட்டம் ஆஷ்லி பார்தியும்(ஆஸ்திரேலியா) ஓய்வு பெற்று விட்டார். அதே நேரத்தில் கர்பினி முகுருசா(2016, ஸ்பெயின்), சிமோனா ஹலேப்(2018, ருமேனியா) ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. நடப்பு சாம்பியன் இகா ஸ்வியா டெக்(2020, 2022 போலாந்து), முன்னாள் சாம்பியன்கள் யெலானா ஆஸ்டபெங்கோ(2017, லாட்வியா), பார்போரா கிரெஜ்சிகோவா(2021, செக் குடியரசு) ஆகியோர் இந்த தொடரில் களம் காண உள்ளனர்.

அதே போல் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 14 முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ரபேல் நடால்(ஸ்பெயின்) காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அறிமுகமான 2005ம் ஆண்டே சாம்பியன் பட்டம் வென்ற நடால், பங்கேற்காத முதல் பிரெஞ்ச் ஓபன் இதுதான். நடால் வருகைக்கு முன்பு சாம்பியன் பட்டம் வென்றவர்கள் எல்லோரும் ஓய்வு பெற்று விட்டனர். கூடவே சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர்(2009) 2022ல் ஓய்வு பெற்று விட்டார். மற்றொரு சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டான் வாவ்ரிங்கா(2015), செர்பிய வீரர் ஜோகோவிச்(2016, 2021) ஆகியோர் மட்டுமே இந்தப் போட்டியில் களம் காண உள்ள முன்னாள் சாம்பியன்கள்.

The post நாளை தொடங்கும் பிரெஞ்ச் ஓபன்: முன்னாள் சாம்பியன்கள் குறைவு appeared first on Dinakaran.

Related Stories: