கரூர் மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள், மக்கள் அவதி

கரூர், மே 26: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் நடமாட்டத்தால் தொழிலாளர்கள், பொதுமக்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நாய்கள் நடமாட்டத்தை விரைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தற்போது எண்ணில் அடங்காத வகையில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

தொழில் நகரம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வேலைக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு தங்களின் குடியிருப்புகளை நோக்கி செல்லும் பொதுமக்கள் முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை தெரு நாய்களின் நடமாட்டம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை மொத்தமாக பிடித்துச் சென்று, கருத்தடை செய்து திரும்பவும் அதே பகுதிகளில் இறக்கி விட்டு செல்லும் நிகழ்வும் தாந்தோணிமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே, ஒட்டுமொத்தமாக தெரு நாய்களின் நடமாட்டத்தையும், அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் நலன் கருதி, நாய்களை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post கரூர் மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள், மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: