கரூர்-கோவை சாலையில் வாகன போக்குவரத்தில் ஏற்படும் குளறுபடி நீங்குமா?

கரூர், மே 26: கரூர் கோவை சாலை ரெட்டிப்பாளையம் பிரிவு அருகே வாகன போக்குவரத்தில் ஏற்பட்டு வரும் குளறுபடிக்கு தீர்வு காண தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் இருந்து கோவை, பொள்ளாட்சி, பழனி, தாராபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருக்காம்புலியூர் ரவுண்டானா, ரெட்டிப்பாளையம் பிரிவு வழியாக சென்று வருகிறது.

திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் இருந்து ரெட்டிப்பாளையம் பிரிவு வரை சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்த பகுதிச் சாலையில் ரெட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் இருந்து வேலுசாமிபுரம், ஈரோடு ரோடு, ஆத்தூர் போன்ற பகுதிகளுக்கு ஒரு பகுதியில் இருந்தும், மற்றொருபுறம் பெரியாண்டாங்கோயில் போன்ற பகுதிகளுககும் எதிரெதிரே சாலைகள் பிரிந்து செல்கிறது.

ஒரு புறம் கோவை நோக்கி செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் பல்வேறு பகுதிகளுக்கு பிரிவுச் சாலை செல்லும் இந்த இடத்தில் வாகனங்கள் குறுக்காக சென்று வருவதால் அடிக்கடி வாகன குளறுபடி ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் இதன் காரணமாக சிறு விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, கோவை சாலையில் ரெட்டிப்பாளையம் பிரிவு அருகே நிகழும் இந்த வாகன குளறுபடியை சீர் செய்யும் வகையில் தேவையான நிரந்தர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையை பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர்-கோவை சாலையில் வாகன போக்குவரத்தில் ஏற்படும் குளறுபடி நீங்குமா? appeared first on Dinakaran.

Related Stories: