விவசாயிகள் எதிர்பார்ப்பு: கட்டிட பணிக்கு பொருட்கள் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது

அரியலூர், மே 26: கட்டிட தொடர்பான பணிக்கு கம்பி தருவதாக கூறி பலரிடம் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட ஒப்பந்தக்காரர். இவரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு முருகன் என்பவர் அறிமுகப்படுத்திக் கொண்டு, கம்பி டீலர் என்றும், கட்டுமான பணிக்கு தேவையான கம்பிகளை குறைந்த விலைக்கு வழங்குவதாக கூறினார்.

இதையடுத்து வெங்கடேசன் கம்பிகளை ஆர்டர் செய்தார். பெரம்பலூரில் உள்ள ஒரு கடையில் கம்பி ஆர்டர் செய்து, கடைக்காரர்களின் வண்டியிலே கம்பி லோடு ஏற்றி வந்து ஒப்பந்தக்காரர் வெங்கடேசன் வேலை செய்யும் கட்டிடத்தில் இறக்கிவிட்டு, மீதமுள்ள கம்பி லோடுடன் வண்டியை வேறு இடத்திற்கு சென்று நிற்க சொல்லிவிட்டு, வெங்கடேசனிடம் ரூ.1,46,500 பணம் பெற்றுக் கொண்டு, தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமுறைவாகிவிட்டார். இதையடுத்து வெங்கடேசன் கயர்லாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் வாணி (இணைய குற்றப்பிரிவு) தலைமையில் எதிரியை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து, தேனி மாவட்டம் சென்று, போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் புது காலனி தெருவைச் சேர்ந்த நாகராஜ் (38) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடமிருந்து கார், இரு சக்கர வாகனங்கள் 3, செல்போன் 4, பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

The post விவசாயிகள் எதிர்பார்ப்பு: கட்டிட பணிக்கு பொருட்கள் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: