திருப்பூரில் காற்றுடன் மழை மேற்கூரை விழுந்து வீடு சேதம்

திருப்பூர், மே 26: திருப்பூர் அருகே காற்றுடன் பெய்த மழையால் பக்கத்து வீட்டின் மேற்கூரை பறந்து வந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த மேற்குபதி ஊராட்சிக்கு உட்பட்ட மரியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், கோவேந்திரன் என்பவரது வீட்டின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த அஜித்குமார் என்பவரது வீட்டில் மேலே விழுந்தது. மேலும், பலத்த காற்றால் இருவரது வீட்டில் இருந்த பொருட்களும் தூக்கி வீசப்பட்டு சேதமானது. அப்பகுதியில் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக இரு வீட்டிலும் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இருவரும் தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்பூரில் காற்றுடன் மழை மேற்கூரை விழுந்து வீடு சேதம் appeared first on Dinakaran.

Related Stories: