ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட தோனிக்கு தடை விதிக்கப்படலாம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை: ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதிச் சுற்று 1-ன் போது அவர் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் என கூறப்படுகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில், குஜராத் அணி – சென்னை அணி இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சேர்க்கப்பட்டார்.

அவர் ஒரு கட்டத்தில் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார். அவரை பந்துவீச கேப்டன் தோனி அழைத்த போது, நடுவர் தடுத்து நிறுத்தினார். இப்போது தான் அவர் களத்திற்கு வந்திருக்கிறார். உடனடியாக அவரை பந்து வீச அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறியுள்ளார். இதனால் அதிருப்திக்குள்ளான தோனி மற்றும் சக வீரர்கள் நடுவரிடம் சில நிமிடங்கள் வாதிட்டனர். பிறகு நடுவரின் சம்மதத்துடன் அந்த ஓவரை பதிரானா வீசினார்.

இந்த காரசார விவாதங்கள் நடந்து முடிய எட்டு நிமிடங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது, பின்பு பதிரானா பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நடுவர்கள் தோனி மீது குற்றம் சாட்டினால் அவர் இறுதி போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை மெதுவாக பந்து வீசியதற்கு தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வரும் மே 28-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. பிசிசிஐ-யின் விதியின்படி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அடுத்த போட்டியின் விளையாட மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

The post ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட தோனிக்கு தடை விதிக்கப்படலாம்: ரசிகர்கள் அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Related Stories: