ஆபத்தான வளைவு பாதையில் கொளந்தானூரில் வேகத்தடை அமைக்கப்படுமா?

கரூர், மே 25: கரூர் அருகே கொளந்தானூரில் ஆபத்தான வளைவு உள்ள பாதையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெரசா கார்னர் பகுதியில் இருந்து கொளந்தானூர், ராமானூர், இபி காலனி, பசுபதிபாளையம், புலியூர், நரிக்கட்டியூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கொளந்தானூர் வழியாக செல்கிறது. மேலும், கரூர், தெரசா கார்னர் பகுதியில் இருந்து அம்மன் நகர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கொளந்தானூர் வளைவு பாதையை ஒட்டியுள்ள பாதையில் சென்று வருகிறது.

இந்த வளைவு பாதையோரம் டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆபத்தான வளைவு பாதையாக உள்ள கொளந்தானூர் பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.இந்த வளைவு பாதையில் வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே, வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் கொளந்தானூர் வளைவு பாதையோரம் வேகத்தடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், இவ்வழியை பயன்படுத்துவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆபத்தான வளைவு பாதையில் கொளந்தானூரில் வேகத்தடை அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: