வெள்ளியணை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்: விபத்தில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்

கரூர், மே 25: கரூர் – திண்டுக்கல் சாலை வெங்ககல்பட்டி பகுதியை தாண்டியதும், திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை சாலையில் அதிகளவில் விவசாய, மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ளவர்கள், கால்நடைகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர். காலை 10 மணிக்கு பிறகு கால்நடைகளை கொண்டு சென்று மேய்ச்சல் நிலங்களில் விட்டு விடுகின்றனர். அவ்வாறு விடப்படும் மாடுகள் போன்ற கால்நடைகள் அப்பகுதி சாலைகளை எளிதாக கடந்து செல்கின்றன.

கரூர் – திண்டுக்கல் சாலையில் அதிகமான வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வெள்ளியணை வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையின் மையத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சாலையில் ஆங்காங்கே ஆடுகள், மாடுகள் அடிக்கடி குறுக்கிடுவதால் சில சமயங்களில் விபத்துக்கள் நடைபெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.எனவே, கால்நடைகளை பிரதான சாலையோரம் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையில் அடிக்கடி கால்நடைகள் குறுக்கிடுவதை பார்வையிட்டு தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெள்ளியணை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்: விபத்தில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: