பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் கத்தியை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது

 

தில்லைநகர், மே 24: திருச்சி தென்னூர் சின்னசாமி நகரில் வசித்து வரும் முருகேசன் மனைவி கலாதேவி(45). இவர் கடந்த 20ம்தேதி இரவு 11 மணியளவில் தனது தாயார் நாகரெத்தினத்திடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்கிற ஷேக் சர்தார் ரஹ்மான்கான் (25), கலாதேவியிடம் உனது மகன் எங்கே என்று கேட்டதோடு, 500 ரூபாய் பணம் கேட்டு உள்ளார். பணம் கொடுக்க மறுத்த கலாதேவியை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து தில்லை நகர் போலீசார் கலாதேவி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையன் என்கிற ஷேக் சர்தார் ரகுமான்கானை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

எம்எல்ஏவை பாராட்டும் மக்கள் தொட்டியம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் வடகரை பகுதியில் தண்ணீர் கொண்டு வந்து விவசாயிகளும் குடிநீர் திட்டமும் பயன்பெறும் வகையில் முதல் கட்ட முயற்சியாக முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தொட்டியம் காரைக்காடு பகுதியில் இருந்து தொட்டியம் வரை ராட்சத ஹிட்டாச்சி இயந்திரத்தின் உதவியுடன் காவிரி ஆற்றில் சிறு வாய்க்கால் அமைத்து கரை ஓரத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று முயற்சி மேற்கொண்ட தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு விவசாய சங்கங்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளன. முயற்சியின் தொடர்ச்சியாக தொட்டியத்தில் இருந்து ஆமூர் வரை காவிரி ஆற்றின் வடகரை பகுதிகளில் தண்ணீர் கொண்டு வருவதற்கும், எம்எல்ஏ முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் கத்தியை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: