அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க தீவிரம்

 

கரூர், மே 24: கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் வகையில், வேன்களில் ஏற்றி அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பணி நேற்று நடைபெற்றது. நடப்பு 2023-24ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் மாதம் முதல் துவங்கவுள்ளன. ஏற்கனவே, கல்வியாண்டு முடிந்து, பொதுத்தேர்வுகளும் நடத்தப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் வகுப்புகள் 10 நாட்களில் துவங்கவுள்ளன.

இதனை முன்னிட்டு ஒன்றியம் வாரியாக பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை பிரித்து வைக்கும் நிகழ்வு அனைத்து ஒன்றியங்களிலும் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கரூர் ஒன்றியத்துக்கான பாடப்புத்தகங்கள் கருர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முதல் பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் வேன்களில் ஏற்றப்பட்டு, பள்ளி வாரியாக கொண்டு சென்று ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: