வயதான தம்பதி கொலை வழக்கு: தனிப்படை விசாரணை

 

கரூர், மே 24: கரூர் அருகே வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள ஒடையூரில் உள்ள மாம்பழத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்த வயதான தம்பதியினர் தங்கவேல், தைலி ஆகிய இருவரையும், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு அவர்கள் தங்கியிருந்த குடிசைக்குள் புகுந்து கல் மற்றும் அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

இந்நிலையில், இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த திருச்சி சரக டிஐஜி உத்தரவின் பேரில், கரூர் எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் கொண்ட ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்’ என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

The post வயதான தம்பதி கொலை வழக்கு: தனிப்படை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: