ஓபிஎஸ் வலியுறுத்தல் கொசு ஒழிப்பு கள பணியாளர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

சென்னை: கொசு ஒழிப்பு கள பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வம் பெற வேண்டுமெனில் புறத்தூய்மை இன்றியமையாதது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த புறத்தூய்மை பணியை மேற்கொள்வதிலும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதிலும் கொசு ஒழிப்பு களப் பணியாளர்களின் பங்கு மகத்தானது.

ஆனால், இவர்களின் கஷ்டங்கள் களையப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. கொசு ஒழிப்பு களப் பணியாளர்களின் சேவையினையும், நீண்ட நாட்கள் தற்காலிகமாக பணி புரிந்து வருவதையும், அவர்களுடைய ஏழ்மைத் தன்மையினையும் கருத்தில் கொண்டு, கொசு ஒழிப்பு களப்பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ஓபிஎஸ் வலியுறுத்தல் கொசு ஒழிப்பு கள பணியாளர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: