திருவள்ளூர்: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக நசரத்பேட்டை ஊராட்சியில் தமிழனத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு ஒன்றியச் செயலாளர் கமலேஷ் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் திருமலைராஜ், ஏழுமலை, ஜெகன் ஆகியோர் ஏற்பாட்டு செய்து முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு இரண்டு புல்லட்கள் மற்றும் 22 வீரர்களுக்கு டிவிக்களை பரிசாக வழங்கினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எம்ஏ, ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் இராஜி, காயத்திரி தர், ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் குமார், நகரச் செயலாளர் திருமலை, ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாமலை, இளையன், ஜனார்த்தனன், புகழேந்தி, பாஸ்கர், சுமதிகுமார், பிரபாகரன், பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ரவி, கிளை நிர்வாகிகள் கேசவன், தேவதாஸ், ஜெயகோபால், ஏகாம்பரம், ஆறுமுகசாமி, லிங்கேஷ்குமார், சுரேஷ், சரவணன், வடிவேல், சுதாகர், பாலன், ஜெயராமன், ராமமூர்த்தி, மனோகரன் கோகுலன், காந்தி, சுரேஷ், துளசி, ரவி, ராஜேந்திரன், கமல், உதயா, கார்த்தி, ராமச்சந்திரன், வரதன், வெங்கு, காமேஷ், ரகுநாதன், அருள், நாகராஜ், சரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு புல்லட், டிவி; சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.