சனிதோறும் நன்னியூர், நெரூர் வடக்கு பகுதியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு

 

கரூர், மே 23: விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் செய்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் மாவட்டம் நன்னியூர், நெரூர் வடக்கு ஆகிய பகுதிகளில் 2 பொக்லைன் வைத்து பொதுப்பணித்துறை சார்பில் 04.94 ஹெக்டேர் பரப்பளவில் மணல் குவாரிகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால், 2 மணல் குவாரிகளிலும் சட்ட விதிமீறல்கள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 2 பொக்லைன் வைத்து இயக்காமல், 8 இயந்திரங்களை வைத்து இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் அள்ளாமல், வேறு பகுதியில் அள்ளப்படுவதாகவும் தெரிகிறது. அனுமதி அளிக்காத இடத்தில் மண் அள்ளுவது, அனுமதிக்கப்பட்ட இடத்தில், அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமாக மணல் அள்ளுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், குடிநீர் பற்றாக்குறை உட்பட பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதனை கருத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post சனிதோறும் நன்னியூர், நெரூர் வடக்கு பகுதியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: