ஹஜ் புனித பயணம் செல்வோருக்கு தடுப்பூசி

 

திருப்பூர், மே 23: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள திருப்பூர் பகுதிகளில் இருந்து பலர் செல்கிறார்கள். இந்நிலையில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கிறவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று அவினாசி ரோட்டில் உள்ள டிஎஸ்கே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. டாக்டர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இங்கு தேவையான தடுப்பூசி மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே புனித பயணம் மேற்கொள்கிறவர்கள் வந்து தடுப்பூசி போடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஹஜ் புனித பயணம் செல்வோருக்கு தடுப்பூசி appeared first on Dinakaran.

Related Stories: