திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்படும்

 

திருப்பூர், மே. 23: திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்படும் என புதியதாக கலெக்டராக பதவியேற்ற கிறிஸ்துராஜ் கூறினார். தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த வினீத், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ் பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கலெக்டராக நியமிக்கப்பட்ட கிறிஸ்துராஜ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் திருப்பூர் மாவட்டத்தின் 11வது கலெக்டர் ஆவார்.

கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைத்ததும் சென்னையில் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்தேன். அப்போது அவர் தமிழக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய உழைத்திட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இதற்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்படும். இதற்காக அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்படும் appeared first on Dinakaran.

Related Stories: