விடாமுயற்சி..விஸ்வரூப வெற்றி!!: செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்..!!

போரில் இரு கால்களை இழந்த முன்னாள் நேபாள ராணுவ வீரர் ஒருவர், செயற்கைக் கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். 43 வயதான ஹரி புதாமகருக்கு முழங்காலுக்குக் கீழ் இரு கால்களும் கிடையாது. பிரிட்டனுக்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் பங்கேற்றபோது, 2010ம் ஆண்டில் தனது இரு கால்களையும் அவர் இழந்தார். உடல் ரீதியான சவால்களால் துவண்டு போகாமல், விடாமுயற்சியுடன் செயற்கை கால்களின் துணையுடன் எவரெஸ்டில் ஏறி ஹரி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

The post விடாமுயற்சி..விஸ்வரூப வெற்றி!!: செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்..!! appeared first on Dinakaran.

Related Stories: