வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை

 

அரவக்குறிச்சி, மே 22: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அரசு மருத்துவமனை அருகில் பஸ்நிலையம் செல்லும் சாலை, கரூர் சாலை, திண்டுக்கல் சாலை ஆகிய மூன்று சாலை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு குறுகலாக இருப்பதாலும், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற வங்கிகள் மற்றும் வணிக வளாகங்களும் இப்பகுதியில் உள்ளன. அரசு மருத்துவமனைக்கு நேரங்களில் கல்லூரி பள்ளி செல்லும் வாகனங்கள் இந்த சந்திப்பில் நின்று செல்கின்றன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

இந்நிலையில் மூன்று சாலை சந்திப்பு வளைவில் டூ வீலர்கள் உள்ளிட்டவாகணங்கள் அதிவேகத்தில் வந்து திரும்புகின்றன. அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. பெரும் விபத்து ஏற்படும் முன்பு பள்ளபட்டி மருத்துவமனை அருகில் கரூர் செல்லும் சாலையில் விபத்தை தடுக்கும் விதமாக பெரிய விபத்து ஏற்படும் முன்பாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: