கரூர் பிஏ. வித்யா பவன் பள்ளி சாதனை

 

கரூர், மே 22: கரூர் பி. ஏ. வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தது. 12ம் வகுப்பில் வெற்றிவேல் என்ற மாணவன் தமிழ்-99, ஆங்கிலம்-98, இயற்பியல்-99, வேதியல்-100, உயிரியல்-99, கணிதம்-100 மதிப்பெண்களுடன் 595/600 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். என்.தீபிகா என்ற மாணவி 593/600 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்தார்.எஸ். நிஷா என்ற மாணவி 587/600 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் 3ம் இடம் பெற்று சாதனை படைத்தார். பாடவாரியாக 100/100 மதிப்பெண்களை 22 மாணவர்கள் பெற்று சாதனை படைத்தனர்.

11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் எஸ்ஜெ. ஜெய் சூர்யா என்ற மாணவன் 573/600 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடம் ‌பெற்று சாதனை படைத்தார்.பி.சபிதா என்ற மாணவி 567/600 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்தார். பி.நந்தினி என்ற மாணவி 566/600 மதிப்பெண்களுடன் பெற்று பள்ளி அளவில் 3ம் இடம் ‌பெற்று சாதனை படைத்தார். மேலும் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் எம். ரதி பிரியா என்ற மாணவி 483/500 மதிப்பெண்களுடன் பெற்று பள்ளி அளவில் முதலிடம் இடம் ‌பெற்று சாதனை படைத்தார். டி. நிதர்சனா என்ற மாணவி மற்றும் ஜி.சஞ்சீவி என்ற மாணவனும் இருவரும் 482/500 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர். கே.ஹர்ஷிதா ரூபிணி மற்றும் ஐ.அஸ்வினி என்ற மாணவி இருவரும் 479/500 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் 3ம் இடம் பெற்று சாதனை படைத்தனர்.

The post கரூர் பிஏ. வித்யா பவன் பள்ளி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: