தீக்குளித்து பெண் தற்கொலை

 

பல்லடம், மே 22: பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலா (47). கணவர் இறந்துவிட்டதால் கலா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கலாவுக்கும் கட்டிட தொழிலாளியான பெரும்பாலியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சிறிது காலம் பேசிப் பழகிய பாலசுப்ரமணியன் கடந்த சில மாதங்களாக கலாவுடன் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் வசிக்கும் பெரும்பாலி வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயன்றுள்ளார். அப்போது எனக்கு குடும்பம் உள்ளது இனி மேல் நீ வர வேண்டாம் என பாலசுப்ரமணியன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த கலா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post தீக்குளித்து பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: