கொங்குநகர், சின்னேரிபாளையத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

 

திருப்பூர், மே. 22: திருப்பூரில் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி கொங்குநகரில் நடைபெற்றது. இதனை வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.வடக்கு மாநகர செயலாளர் மேயருமான தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சூர்யா, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி செயலாளர் போலார் சம்பத், வட்ட செயலாளர் கோமகன் மற்றும் திமுக நிர்வாகி திலக், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பார்த்திபன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளும், திமுக நிர்வாகிகளும் பலர் கலந்துகொண்டனர்.

அவிநாசி: அவிநாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நேற்று நடைபெற்றது. செல்வராஜ் எம்எல்ஏ பங்கேற்று, புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து களஆய்வு மேற்கொண்டு ேபசினார். நிகழ்ச்சிக்கு, அவிநாசி ஒன்றிய கழக செயலாளரும் கவுன்சிலருமான சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சின்னேரிபாளையம் ஆதிதிராவிடர் காலனி கிளை செயலாளர் மருதாசலம் மற்றும் சிலுவைபுரம் கிளை செயலாளர் வின்சென்ட் ஆகியோர் வரவேற்றனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செல்வரங்கம், அவிநாசி ஒன்றிய அவைத்தலைவர் சிவசாமி, அவிநாசி ஒன்றிய துணை செயலாளர்கள் மோகனசுந்தரம், வசந்தாமணி, பழனிசாமி, அவிநாசி ஒன்றிய கழக பொருளாளர் கதிரவன், வடக்கு மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடாசலமூர்த்தி, ரங்கன், சென்னியப்பன் உட்பட கலந்து கொண்டனர்.

The post கொங்குநகர், சின்னேரிபாளையத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: