திருப்பூர் மாவட்டத்தில் 32 நில அளவையர்கள் நியமனம்

 

திருப்பூர், மே 20: அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவையர், வரைவாளர் பணிக்கு தேர்வானவர்களை பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நில அளவைத் துறைக்கு நில அளவையர் 24 பேர், வரைவாளர் 8 பேர் என மொத்தம் 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நில அளவையாளர்கள் பங்கேற்றனர். நில அளவைத்துறை உதவி இயக்குனர் சசிகுமார், திருப்பூர் மண்டல ஆய்வாளர் ஹரிதாஸ் ஆகியோரை சந்தித்தனர். புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளோருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 நாட்கள் நில அளவை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்கு பின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காலியிடங்களில் பணி அமர்த்தப்பட்டு, நில அளவை பணிகளை மேற்கொள்வர்.

The post திருப்பூர் மாவட்டத்தில் 32 நில அளவையர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: