திருப்பூரில் இடியுடன் கூடிய மழை

 

திருப்பூர், மே 20: திருப்பூரில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூரில் பின்னலாடை தொழில் ஒரு புறம் இருந்தாலும், அதே அளவிற்கு விவசாயமும் நடந்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், முருங்கை, சோளம், கத்தரி, செங்காந்தள் மலர் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விளைவித்து சந்தை படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் வெயில் காலம் தொடங்கியது முதல் கடும் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், திருப்பூர் குளிர்ந்தது. தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post திருப்பூரில் இடியுடன் கூடிய மழை appeared first on Dinakaran.

Related Stories: