பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை கருத்தரங்கம்

 

உடுமலை, மே 20: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மூலனூர் கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தென்னை நோய், பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு, உர மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது.கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி வரவேற்றார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். இதில், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: தென்னையில் நோய் தாக்கம் என்பது அதிகரித்து வருகிறது. முடிந்தளவு அதை தடுப்பதற்கு, மரத்தை காப்பாற்ற இது துண்டுகோலாக அமையும்., துண்டுபிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

செல்போன் மூலமாகவும் தெரிந்துகொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு இருக்கிறது. வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளோம். இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தென்னையில் பூச்சி மேலாண்மை குறித்து வேளாண் பல்கலை. பூச்சியியல் துறை இணை பேராசிரியர் அருள்பிரகாசம், நோய் மேலாண்மை குறித்து நோயியல் துறை இணை பேராசிரியர் லதா, தென்னை பராமரிப்பு வழிமுறைகள் குறித்து இணை பேராசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினர்.

முடிவில் வேளாண்மை துணை இயக்குநர் புனிதா நன்றி கூறினார்.இதில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அணிக்கடவு கிரி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன, மாவட்ட விவசாய அணை அமைப்பாளர் ரகுபதி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். மூலனூரில் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில்,“தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்பேரில், உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் ஒத்துழைப்போடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தென்னையில் ஏற்படக்கூடிய நோய் தாக்குதலை கட்டுப்படுத்தக்கூடிய கருத்தரங்கம் நடக்கிறது. வேளாண் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்தப்படும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான வலை தரப்படும்’’ என்றார்.

The post பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: