பூமிக்கு மேலே ஒரு லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் திருமணம்.. 1,000 பேர் முன்பதிவு..!!

ஒரு லட்சம் அடி உயரத்திற்கு சென்று விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியை தனியார் நிறுவனம் வழங்க முன் வந்துள்ளது. அதற்காக, விண்வெளியில் திருமணம் செய்துகொள்ள நபர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயி க்கப்பட்டு உள்ளது. ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் திருணம் செய்துகொள்ள விரும்பும் ஜோடிகளை கார்பன் நியூட்ரல் ராட்சத பலூனில் விண்வெளிக்கு அனுப்புகிறது. பூமியில் இருந்து கிளம்பும் ஜோடி, சரியாக ஒரு லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியிலிருந்தபடி பூமியின் அழகை கண்டுகளித்துக் கொண்டே திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் முடிந்ததும் திருமண தம்பதிகளாக அவர்கள் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படுவர். இந்த முறையில் விண்வெளியில் திருமணம் செய்துகொள்ள ஏற்கெனவே 1,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

The post பூமிக்கு மேலே ஒரு லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் திருமணம்.. 1,000 பேர் முன்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: