உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி..!!

உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி ராணுவ இசையுடன் தொடங்கியுள்ளது. மலைகளின் அரசியான உதகையில் கோடைகாலமானது நடைபெற்று வருகிறது. இந்த சீசனை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படையெடுக்க தொடங்கியிருப்பதனால், சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முக்கிய நிகழ்வாக சிறிய தினம் 10.15 மணியளவில் 125 மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா மற்றும் நீலகிரி ஆட்சி தலைவர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மலர்களை பார்வையிட்டனர்.

The post உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: