பல்லடம், மே 19: பல்லடம் பகுதியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை நபருக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ராமேஸ்வரம் – கோவை செல்லும் அரசு பஸ் ேநற்று முன்தினம் பல்லடம் பஸ் நிலையம் வந்தது. பஸ்சில், மதுரையை சேர்ந்த வேல்முருகன் (50) என்பவரும் பயணித்தார். மது போதையில் இருந்த அவர் பஸ்சின் கடைசி சீட்டில் அமர்ந்தார். அப்போது அவர் தனது கண் கண்ணாடியை காணவில்லை என தேடிக் கொண்டிருந்தார்.
கிடைக்காததால் பஸ் ஜன்னல் கண்ணாடியை கையால் அடித்து உடைத்தார். கண்ணாடி உடைந்ததுடன், வேல்முருகனின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதனால் பஸ் பல்லடம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. டிரைவர் சம்பத்குமார் மற்றும் நடத்துனர் நாகராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் விசாரித்த பல்லடம் போலீசார் கண்ணாடியை உடைத்தற்காக ரூ.500 அபராதம் விதித்து வசூலித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
The post குடிபோதையில் பஸ் கண்ணாடியை உடைத்த பயணிக்கு அபராதம் appeared first on Dinakaran.