மெக்சிகோவில் வேன் – லாரி மோதி தீப்பிடித்தது: குழந்தைகள், பெண்கள் உள்பட 26 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

மெக்சிகோவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். விக்டோரியா, ஜரகோசா நெடுஞ்சாலையில் ட்ரைலர் மற்றும் வேன் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் தீ பிடித்து எரிய தொடங்கின. இந்த விபத்தில் வேனில் பயணித்த அனைவரும் தீயில் எரியுண்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவர். உடல்கள் தீயில் கருகியுள்ளதால், அதிகாரிகளால் அவற்றை அடையாளம் காணமுடியவில்லை. மாகாண பாதுகாப்பு துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மெக்சிகோவில் வேன் – லாரி மோதி தீப்பிடித்தது: குழந்தைகள், பெண்கள் உள்பட 26 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: