தஞ்சை அருகே சாமுண்டீஸ்வரி கோயில் விழா; உடலில் கத்தியால் வெட்டி பக்தர்கள் வினோத வழிபாடு

திருடைமருதூர்: தஞ்சாவூர் அருகே துகிலி ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோயிலில் நேற்று நடந்த ஜோதி மஹோத்சவத்தில் 500 பக்தர்கள் உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு வினோத வழிபாடு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே துகிலியில் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜோதி மஹோத்சவம் நடக்கும். ஆனால், 12 ஆண்டுகளாக நடக்காத இந்த விழா, கடந்த 10ம் தேதி மஹா கணபதி ஹோமம், மஹா சக்தி ஹோமம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து காவிரியாற்றில் சக்தி கத்திகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தங்களது உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் துகிலி காவிரி ஆற்றிலிருந்து மங்கல வாத்தியங்களுடனும், வாணவேடிக்கைகளுடனும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு வினோத வழிபாடு நடத்தினர்.

The post தஞ்சை அருகே சாமுண்டீஸ்வரி கோயில் விழா; உடலில் கத்தியால் வெட்டி பக்தர்கள் வினோத வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: