உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதவுள்ள இந்திய அணியில், காயம் காரணமாக விலகியுள்ள கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இந்த டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி தொடங்க உள்ளது. சமீபத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக லக்னோவில் மே 1ம் தேதி நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சூப்பர் ஜயன்ட்ஸ் அணி கேப்டன் ராகுல் பீல்டிங் செய்தபோது தொடை பகுதியில் பலத்த காயம் அடைந்தார்.

அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் மற்றும் உலக டெஸ்ட் பைனலில் இருந்து விலகினார். இந்த நிலையில், உலக டெஸ்ட் பைனலுக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: