தனியார் உரக்கடைகளில் தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும்

செம்பனார்கோயில், மே8: தனியார் உரக்கடைகளில் தரமான நெல்விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று மாயிலாடுதுறை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பிவ் கூறியிருப்பதாவது:மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது பம்புசெட் வைத்துள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். அதனால் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் நெல் விதைகளை வாங்கி செல்கின்றனர். தனியார் விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நெல் ரக உண்மை நிலை, விதைகளுக்கான பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இதனை ஆய்விற்கு வரும்போது அதிகாரியிடம் காட்ட வேண்டும். மேலும் பருவத்திற்கு ஏற்பில்லாத விதை ரகங்களை விற்பனை செய்யக்கூடாது.

விதை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிப்பதோடு, சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.முறையான சான்றுகள் மற்றும் சேமிப்பு முறைகளை கடைபிடிக்கப்படாத நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் விதை விற்பனைக்கு தடை விதிப்பதுடன், உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மயிலாடுதுறை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தெரிவித்தார்.

The post தனியார் உரக்கடைகளில் தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: