கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு

 

உடுமலை, மே 8: உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி எஸ்வி புரத்தில் இருந்து பழனி செல்லும் இணைப்பு சாலை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் அதிகம் செல்லும் சாலையாக இருந்து வந்தது. இச்சாலை மிகவும் பழுதடைந்து 40 ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை. அதை ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு முயற்சியால் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் பரிந்துரையின் பேரில், ரூபாய் 16 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்பட்டு முடிவடைந்தது.

இதையடுத்து சீரமைக்கப்பட்ட புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைப்பதற்காக திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், எஸ்சி மில் குரூப்ஸ் ரவீந்திரன், உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தங்கராஜ் மெய்ஞானமூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இவ்விழாவில், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் பேசியதாவது: இந்தியாவுக்கே வழிகாட்டியாக இன்றைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

The post கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: