பல் பிடுங்கிய விவகாரம் ஜிஹெச் டீனுக்கு சிபிசிஐடி கடிதம்

நெல்லை: நெல்லை மாவட்டம், அம்பை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனை டீனுக்கு இவ்விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். இதில் ஆட்டோ டிரைவர் வேதநாராயணனுக்கு பற்கள் பிடுங்கப்பட்டு உள்ளதா? ஜல்லிக்கற்கள் மூலமாக பற்கள் பிடுங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. உண்மையிலேயே அப்படி பற்களை பிடுங்க முடியுமா?, பல் பிடுங்கும் போது ஏற்படும் காயங்கள் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?, இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது போன்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

The post பல் பிடுங்கிய விவகாரம் ஜிஹெச் டீனுக்கு சிபிசிஐடி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: