மத்திய பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு

போபால் : மத்திய பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் கட்டாய மத மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆகையால் இந்த படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

The post மத்திய பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு appeared first on Dinakaran.

Related Stories: