சில்லிபாயிண்ட்…

* இங்கிலாந்து மகளிர் அணி வேகப் பந்துவீச்சாளர் கேதரின் ஸைவர் பிரன்ட் (37 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தேசிய அணிக்காக 14 டெஸ்டில் 51 விக்கெட், 141 ஒருநாள் போட்டியில் 170 விக்கெட், 112 டி20 போட்டியில் 112 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

* தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள ஆஸ்திரேலிய அணி (அக். 30 – செப். 15) மூன்று டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* தாஷ்கன்டில் நடந்து வரும் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 57 கிலோ எடை பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்திய வீரர் முகமது ஹுசாமுதீன் தகுதி பெற்றுள்ளார்.

* கொரியாவில் நடந்த ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு 5வது இடம் பிடித்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

* சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5000 ரன் என்ற சாதனை மைல் கல்லை அதிவிரைவாக (99 போட்டி, 97வது இன்னிங்ஸ்) எட்டிய வீரர் என்ற பெருமை, பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஸமுக்கு (28 வயது) கிடைத்துள்ளது. முன்னதாக, தென் ஆப்ரிக்காவின் ஹாஷிம் அம்லா 101 இன்னிங்சில் (104 போட்டி) இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Related Stories: