கத்தரி வெயில் நாளை ஆரம்பம்.. அனலை தணிக்க வரும் 5 நாட்களுக்கு கோடை மழை!!

சென்னை : தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் நாளை வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. இம்மாதம் 29ம் தேதி வரை நீடிக்கிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அக்னி வெயிலின் அனலை தணிக்க கோடை மழை கொட்டி வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.சென்னை. மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட ,மாநிலங்களின் பல இடங்களில் நள்ளிரவு கனமழை கொட்டியது.

இதனிடையே நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மே 6ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் வங்கக்கடலில் வரும் 8ம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் தமிழகம் , புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

The post கத்தரி வெயில் நாளை ஆரம்பம்.. அனலை தணிக்க வரும் 5 நாட்களுக்கு கோடை மழை!! appeared first on Dinakaran.

Related Stories: